19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார்.
அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் – சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என தெரிவித்துள்ளார்.
வரும் ஜூலை மாதம், இந்திய அணியின் இளையர் அணி இலங்கையில் 4 நாள் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளதாக BCCI அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள இத்தொடரில் 4 நாள் போட்டியில் தலைமை பொருப்பினை அனுஜ் ராவத் வகிப்பார். இவர் கடந்த 2017-18 ராஞ்சி போட்டியில் டெல்லி அணியின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டி அணியின் தலைமை பொருப்பினை அர்யான் ஜுயால் வகிப்பார். இவர் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் உத்திரபிரதேஷ் அணியில் A வரிசை வீரராக களமிறங்கியது குறிப்பிடத்தக்ககது.
UNA-வில் நடைப்பெற்ற Zonal Cricket Academy போட்டிகளில் U-19 அணியின் முக்கிய போட்டியாளராக அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிட்னி கிரிக்கெட் க்ரவுண் சார்பில், ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற டி20 போட்டியில் அர்ஜூன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.