உலகக்கோப்பைக்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் இம்ரான் தாஹிர்
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான இம்ரான் தாஹிர், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இலங்கை தொடருக்குப்பின் தென்ஆப்பிரிக்கா உலகக்கோப்பையில்தான் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் தாஹிர் இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 3 முறை ஐந்து விக்கெட்டுக்களும், 6 முறை நான்கு விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
வி.வி.எஸ் லக்ஷ்மணின் கனவு அணி;
லகக்கோப்பைக்கான இந்திய அணியினை முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் சொந்த விருப்பத் தெரிவாக அறிவித்து வருகின்றனர். கவுதம் கம்பீர் தன் அணியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் இடம் கொடுத்துள்ளார்.
விவிஎஸ். லஷ்மண் தன் அணியில் ரிஷப் பந்த்தை கழற்றி விட்டு தினேஷ் கார்த்திக்கைச் சேர்த்துள்ளார். ரிஷப் பந்த்தின் சமீபத்திய பார்ம் கேள்விக்குரியதாக இருப்பதால் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் அணியில் அவசியம் வேண்டும் என்று லஷ்மண் உணர்கிறார்.
தினேஷ் கார்த்திக்கை உள்ளடக்கிய விவிஎஸ். லஷ்மணின் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வருமாறு:
ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, அம்பதி ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, ராகுல், தினேஷ் கார்த்திக், கலீல் அகமெட்.