இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கௌதம் காம்பீர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மிகத் திறமையாக பந்து வீசுகிறார் என்று அவரைப் பாராட்டி கூறியுள்ளார்.
இந்திய இந்திய அணியின் புவனேஸ்வர் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக சில ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாட வில்லை இருந்தபோதும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி மிக சிறப்பாக பந்துவீசி உள்ளார்.
இந்நிலையில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் முதல் மூன்று போட்டியில் விளையாடிய புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார், இருந்தபோதும் இவருடைய பந்துவீச்சை சமாளிப்பதற்கு இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இந்தப் போட்டியில் இவருடைய எக்கனாமிக் ரேட் 7.04 மட்டும் தான்.
இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் கூறியதாவது, புவனேஸ்வர் குமார் நியூ பால் வீசுவதில் மிக சிறப்பாக செயல்படுவார். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடும் பொழுது நியூ பால் வீசுவதில் வல்லவராக திகழ்ந்தார். பின் போகப்போக டெத் ஓவார்கள் வீசுவதில் மிக சிறப்பாக செயல்பட்டார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணியாக முஹம்மத் சாமி ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் அவர்களின் ஜோடி சிறப்பாக இருக்கும்,இவர்களின் இந்த வேகப்பந்து ஜோடி மற்ற அணி வீரர்களை திணற செய்யும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது டி20 போட்டிகளில் பும்ரா அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் எக்கனாமிக் ரேட்டில் பும்ராவை விட புவனேஸ்வர் குமார் மிகச் சிறந்தவர். மேலும் வருகிற உலகக்கோப்பை டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் ஒரு முக்கிய வீரராக திகழ்வார் என்று பாராட்டி கூறியுள்ளார்