மும்பை அணியில் இவருக்கு நான் ஒரு குழந்தை – மனம் திறந்த ஹர்திக் பாண்ட்யா! கூறுவது இவரை தான்..
மும்பை அணியில் இவர் என்னை குழந்தைப்போல பார்த்து.. நிறைய கற்றுக்கொடுத்தார் என மனம் திறந்து பேசியுள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.
2016ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா, தொடர்ந்து லிமிடேட் ஓவர் போட்டிகளில் இடம்பெற்றுவந்தார். 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 2018ஆம் ஆண்டிற்கு பிறகு, முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.
உலககோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவந்ததால் நீண்டநாட்களாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதற்கும் அவர்க்கு மாற்று வீரர்கள் சிலர் அணியில் இடம்பெற்றுவிட்டனர். இவரது இடம் கேள்விக்குறியாகியது.
இருப்பினும், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக்கு திரும்பிய ஹர்திக், உள்ளூர் டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அனைவரையும் கவர்ந்து, மீண்டும் தென்னாபிரிக்க செல்லவிருந்த இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார்.
“ஐ.பி.எல். தொடரில் எங்கள் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். என்னை ஒரு குழந்தையை போல பாவித்த அவர், கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை கற்றுத்தந்தார். போட்டியில் ஏற்படும் நெருக்கடியான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது, மன உறுதியுடன் விளையாடுவது உட்பட நிறைய சொல்லிக் கொடுத்தார்.” என்றார்.
மேலும் பேசிய பாண்ட்யா,
“கடந்த 2018ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதுகுப் பகுதியில் காயமடைந்த போது எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன். இதற்கு ஆப்பரேஷன் செய்து கொண்ட பின் நன்றாக ஆடமுடிந்தது.
தற்போது டெஸ்டில் பங்கேற்பது கடினமானதாக இருக்கும் என நினைக்கிறேன். இதனால் எனது முதுகுப் பகுதிக்கு ஆபத்து ஏற்படலாம். ஒருவேளை டெஸ்டில் விளையாடினால், ஒருநாள், டி20 போட்டியில் களமிறங்க முடியுமா? அல்லது சிறப்பாக செயல்பட முடியுமா? என்று தெரியவில்லை. இந்த முதுகுப்பகுதி காயத்தால் என்னால் முழுமையான வீரனாக ஆடமுடியவில்லை.” என்றார்.