மும்பையை கலக்கிய விராட்-அனுஷ்கா இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சி : போட்டோக்கள் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இத்தாலியில் உள்ள பழமையான உல்லாச விடுதியில் கடந்த 11–ந்தேதி ரகசியமாக நடந்தது. 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களுமே பங்கேற்றனர்.

தேன்நிலவு கொண்டாடிவிட்டு தாயகம் திரும்பிய விராட் கோலி– அனுஷ்கா தம்பதியினர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இரண்டு விதமாக நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கான திருமண வரவேற்பு டெல்லியில் கடந்த 21–ந்தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வாழ்த்தினார்.

இந்த நிலையில் 2–வது முறையாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு தடபுடலாக நடந்தது. இதையொட்டி 300 சிறப்பு விருந்தினர்கள் வரை அமரக்கூடிய அறை பதிவு செய்யப்பட்டிருந்தது.

மும்பையில் உள்ள செயிண்ட் ரெஹிஸ் ஹோட்டலில் பிரம்மாண்ட மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராட்-அனுஷ்கா தம்பதிகள் புதிய ஆடைகளில் விருந்தினர்களை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருகான், கேத்ரினா கைஃப், ரன்பீர் கப்பூர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அஸ்வின், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, பும்ரா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேரில் வந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விக்கெட் கீப்பர் டோனி, தனது மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் வந்திருந்தார்.

இதே போல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் பயிற்சியாளர் கும்பிளே, முன்னாள் வீரர் ஷேவாக், பேட்மிண்டன் மங்கை சாய்னா நேவால், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தி நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விழாவை சிறப்பித்தனர்.

மேலும், ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.

 

Editor:

This website uses cookies.