இந்தியா ஜெயிக்க காரணம் ஷுப்மன் கில்னு நெனச்சிட்டு இருக்கீங்க, அதுதான் இல்லை; இவரால தான் இந்தியா சீரிஸ் வின் பண்ணியது; ரோகித் சர்மா அதை சொல்லாம விட்டுட்டாரு – முன்னாள் வீரர் கருத்து!

இந்திய அணி தொடரை கைப்பற்றிய பிறகு, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவரை ரோகித் சர்மா பேச மறந்துவிட்டார் என சாடியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 மற்றும் கணக்கில் கைப்பற்றியது. தரவரிசையில் முதலிடமும் பிடித்தது.

நியூசிலாந்து தொடரில் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 3 போட்டிகளில் 360 ரன்கள் விளாசி, பாபர் அசாமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி போட்டியில் சிராஜ் மற்றும் சமி இருவருக்கும் ஓய்வு கொடுத்து, வெளியில் அமர்த்தப்பட்டனர். முதல் இரண்டு போட்டிகள் முடிவில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், சமி நான்கு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றுவதற்கு பேட்டிங்கில் கில் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்தாரோ, அந்த அளவிற்க்கு பந்துவீச்சில் இவர்கள் இருவரும் இருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசும்பொழுது, இவர்கள் பற்றி ரோகித் சர்மா துளியும் பேசவில்லை. கில் பற்றி மட்டுமே பேசி, வெற்றிக்கு யார் காரணம் என்பதை ரோகித் சர்மா சரியாக பேசவில்லை என சாடியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

“தொடரை கைப்பற்றிய பிறகு ரோகித் சர்மா சிராஜ் பற்றி சொற்பமாக பேசினார். வெற்றிக்கு காரணம் சிராஜ் என்பதைப் பற்றி குறிப்பிடவே இல்லை. நியூசிலாந்து தொடரை இந்தியா கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி சிராஜை சொல்லுவேன். தொடர் முழுவதும் தடையில்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இலங்கை தொடரின் போதும் அவர் சிறப்பாக செய்தார். இந்த தருணத்தில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக தெரிகிறார். அவரது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆகையால் ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் இவரது சிறந்த பார்மை வெளிக்காட்டி வருகிறார்.

கண்டிப்பாக ஷுப்மன் கில் இரட்டை சதம் மற்றும் சதம் முக்கியமானது. அதேநேரம் பலம்மிக்க எதிரணி வீரர்களும் இலக்கை கிட்டத்தட்ட நெருங்கி விட்டனர். அந்த தருணத்தில் இந்திய அணிக்காக பந்துவீச்சில் நின்றது சிராஜ் மற்றும் சமி இருவரும் தான். அதில் சிராஜ் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. இதனை ரோகித் சர்மா குறிப்பிடாதது ஏனென்று புரியவில்லை.” என பேசினார்.

Mohamed:

This website uses cookies.