இந்தியா-பாக்., கலந்த மிகசிறந்த 11 வீரர்கள் அணி! 6 பாக்., வீரர்கள்.. 5 இந்திய வீரர்கள்! கேப்டன் யார்?

இந்தியா-பாக்., கலந்த மிகசிறந்த 11 வீரர்கள் அணி! 6 பாக்., வீரர்கள்.. 5 இந்திய வீரர்கள்! கேப்டன் யார்?

இந்தியா மற்றும் பாக்., வீரர்கள் கலந்த மிகசிறந்த 11 வீரர்கள் கலந்த அணியை தேர்வு செய்த முன்னாள் பாக்., வீரர் அக்தர். 6 பாக்., வீரர்கள் மற்றும் 5 இந்திய வீரர்களை தேர்வு செய்ததால் ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

பாக்., அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான சோயிப் அக்தர், தனது வேகத்தால் எதிரணிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக சிறந்த ரெக்காட் வைத்துள்ளார். சச்சினை பலமுறை 90 ரன்களில் இருக்கையில் அவுட் செய்து அனைத்து இந்திய ரசிகர்களையும் கடுப்பேற்றியுள்ளது இன்றளவும் மறவாது.

90கள் மற்றும் ஆரம்பகால 2000களில் பல ஜாம்பவான்கள் கிரிக்கெட் உலகத்தில் கொடிகட்டி பறந்துள்ளனர். உதாரணமாக, சச்சின், லாரா, பாண்டிங், கில்கிறிஸ்ட், அக்ரம், அக்தர் போன்றோர் அடக்கம்.

ஆனால், இந்த காலகட்டத்தில் ஆடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களை மட்டும் எடுத்துக்கொண்டு மிகசிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். அதில் 6 பாக்., வீரர்களும் 5 இந்திய வீரர்களும்  உள்ளனர். இந்திய வீரர்களுக்கு ஒரவஞ்சனையா என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளனர்.

அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான ஷோயப் அக்தர், இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் ஆல்டைம் டாப் 10 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்த 10 வீரர்களுமே ஒரே காலக்கட்டத்தில் ஆடியவர்கள்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் ஆகிய நான்கு இந்திய வீரர்களை தேர்வு செய்தார். பாகிஸ்தானிலிருந்து சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக் ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களையும் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கையும் ஸ்பின்னராக சக்லைன் முஷ்டாக்கையும் ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரமையும் வக்கார் யூனிஸையும் தேர்வு செய்துள்ளர்.

அக்தர் தேர்வு செய்த 11 வீரர்கள் அணி:

சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், அப்துல் ரசாக், யுவராஜ் சிங், சக்லைன் முஷ்டாக், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இவர்களுடன் சோயிப் அக்தர்.

 

Prabhu Soundar:

This website uses cookies.