இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் புதிய வீரர் சேர்ப்பு! மீண்டும் அணிக்கு திரும்பும் நட்சத்திரம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் புதிய வீரர் சேர்ப்பு! மீண்டும் அணிக்கு திரும்பும் நட்சத்திரம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் அதிரடி துவக்க வீரர் டி-ஆர்க்கி ஷாட் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட இருக்கிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி மற்றும் இந்திய அணி இரண்டுமே ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த அணியில் ஆல்ரவுண்டர் சீன் அப்போட் இடம் பெற்றிருந்தார். துரதிஷ்டவசமாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கில்சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சீன் அப்போட்-க்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இவரை பரிசோதித்த மருத்துவக்குழு, முழுமையாக குணமடைய குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்போட் இந்தியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்குப் பதிலாக மற்றொரு பேட்ஸ்மேன் ஆல்ரவுண்டர் டி’ஆர்கி ஷார்ட் அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.

பிக் பாஷ் லீக் தொடரில் ஆடி நல்ல பார்மில் இருக்கும் ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியா அணிக்கு கூடுதல் பலமே. இவரின் இணைப்பு ஆஸ்திரேலியா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரி 14ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி துவங்குகிறது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி (கீப்பர்), பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுசாக்னே, கேன் ரிச்சர்ட்சன், டி’ஆர்சி ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் ஷார்துர், நவ் , முகமது ஷமி.

 

Prabhu Soundar:

This website uses cookies.