இந்தியாவை சுக்குநூறாக்க களமிறங்கும் விண்டீஸ் அணி அறிவிப்பு..! இந்த புதிய வீரரை சமாளிக்குமா இந்தியா?

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்க இருக்கும் உத்தேச விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தீவுகள் அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டியில் விண்டீஸ் அணி 207 அடித்தபோதும், கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது.

இதனையடுத்து திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச விண்டீஸ் அணி கணிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய ஹெட்மையர், லீவிஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் மீண்டும் இடம் பெறுவர் என எதிர் பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சொதப்பிய வில்லியம்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கீமோ பால் உள்ளே எடுத்துவர வாய்ப்பிருக்கிறது.

Shimron Hetmyer of West Indies plays a shot during the first T20I match between India and the West Indies held at the Rajiv Gandhi International Stadium, Hyderabad on the 6th December 2019.
Photo by Vipin Pawar / Sportzpics for BCCI

இளம் வீரர் பிரண்டன் கிங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் நிக்கலஸ் பூரன் உள்ளே எடுத்து வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

முதல் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியதால் இரண்டாவது போட்டியில் நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் விண்டீஸ் அணி இருக்கிறது. அதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

உத்தேச மேற்கிந்திய தீவுகள் அணி: கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), சிம்மன்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், எவின் லூயிஸ், கைரி பியர், நிக்கோலஸ் பூரன்,  கீீமோ பால்,ஹைடன் வால்ஸ்.

Prabhu Soundar:

This website uses cookies.