உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வியடைந்து கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு அணியாக உலாவிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது, இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தான் இழந்த மானத்தை திருப்பிப் பெற வேண்டும் என்று இந்திய அணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோன்று பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணி தான் எதிர்கொண்ட 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக திகழ்வதால் இந்த 11 வீரர்கள் தான் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள்
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரதுல்லாஹ் மற்றும் முகம்மது சஹ்ஜாத் ஆகிய இருவரும் களமிறங்குவார்கள் அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரஹ்மானுல்லா குர்பாஜ், மேலும் இவர்களை தொடர்ந்து நசிபுள்ளாஹ் ஜத்ரன் 4-வது இடத்திலும் களம் இறங்குவார், நசிபுள்ளாஹ் இந்தத் தொடரில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அதிக 88 ரன்கள் அடித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்கர் ஆப்கான் ஓய்வை அறிவித்து விட்டதால் ஆப்கானிஸ்தான் அணியில் 5வது பேட்ஸ்மேனாக ஹஸ்மதுல்லாஹ் சாகிதி புதிதாக அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை 4 டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.