நாளை நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஆரோன் பின்ச் விளகல்

நாளை நடைபெறவுள்ள பயிசி ஆட்டத்தில் இருந்து ஆரோம் பின்ச் விளகல்

நாளை சென்னையில் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் விளகியுள்ளார். சென்னையில் நடபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரலிய அணி போர்டு ப்ரெசிடென்ட் அணியை எதிர்த்து விளையாடுவுள்ளது.

ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆரோன் பின்ச் கனுக்கால் காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் இருந்து விளகியுள்ளார்.

இங்கிலாந்தின் கவுண்ட்டி அணியான சர்ரி அணிக்காக ஆடிய போது அவர் காயம் அடைந்துள்ளார்.

மேலும் காயம் ஆகிவிடக் கூடது என, முன்னெச்சரிக்கையாக பயிற்சி ஆட்டத்தில் இருந்து விளகியுள்ளார் எனத் தெரிகிறது.

(Photo Source: Getty Images)

ஆஸ்திரேலிய அணி முன்னரே, முன்னனி  வேகப்பந்து வீச்சளர்கள் ஜோஷ் ஹசல்வுட் மற்றும் மிட்ச்செல் ஸ்டார்க் ஆகியோரின் காயத்தால் பின்னடைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆரோன் பின்ச்சின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெருத்த தலைவலியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அதற்க்கு மேலும், ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான் ஹில்டன் கார்ட்ரைட் இன்று நடந்த பயிற்சி சீசனில் பங்கேற்க்கவில்லை.

(Photo Source: Getty Images)

நாளை நடைபெறவுள்ள போட்டியில் , பஞ்சாப் வீரர் குர்கரீட் சிங் மேன் கேப்டனாக செயல்படுவார்.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இரு அணி வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், வார்னர், ஆஸ்டன் ஆதர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர், மேக்ஸ் வெல், மேத்யூ ஹடே, கும்மின்ஸ், பல்க்குனர், ஹாசல்வுட், டிரெவிஸ்வொட், ஸ்டோனிஸ், ஆடம்சம்பா.

இந்திய போர்டு தலைவர் லெவன்: குர்கீத்சிங்மேன் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி, ரகீல்ஷா, சந்திப்சர்மா, மன்யக் அகர்வால், அவேஷ் கான், சிவம் சவுத்ரி, கோசுவாமி, கார்னீவர், குல்வந்த், குஷாங்பட்டேல், கோவிந்தா போடர், நிதிஷ்ரானா.

முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 கட்டங்களாக இங்கு வந்தனர்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஒரு நாள் போட்டியில் விளையாட முடிவு செய்து இருந்தது.

அதன்படி ஆஸ்திரேலியா- இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் மோதும் பயிற்சி ஆட்டம் சென்னையில் நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. காலை 10 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்த பயிற்சி ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக காணலாம்.

சி, டி மற்றும் இ ஸ்டாண்டுகளின் கீழ் பகுதியில் ரசிகர்கள் அமர்ந்து இலவசமாக பார்க்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Editor:

This website uses cookies.