மீண்டும் இந்தியா முதல் பேட்டிங்! முதல் போட்டிக்கு பழி தீர்க்குமா?

Frankly, Ravindra Jadeja looks a solid slot-in for the all-rounder's spot unless India choose to go with Shivam Dube instead.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக அடக்கி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை கண்டது. இதன்மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றியை கண்டால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், இன்றைய போட்டியில் வெற்றியை கண்டு தொடரை சமன் செய்து மூன்றாவது போட்டி வரை நகரலாம் என்ற முனைப்பில் இந்திய அணியும் களம் இறங்குவதால், ஆட்டத்தில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது.

முதல் போட்டியில் நான்காவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி, இன்றைய போட்டியில் வழக்கம்போல மூன்றாவது இடத்தில் களம் இறங்கி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக ரிஷப் பண்ட் வெளியே அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே உள்ளே அழைத்து வரப்பட்டு இருக்கிறார்.

இன்றைய போட்டியில் ஆடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்:

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி (கீப்பர்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல் (கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா

Prabhu Soundar:

This website uses cookies.