ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை காட்டிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கு !!

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை காட்டிய இந்திய வீரர்கள்; ஆஸ்திரேலியாவிற்கு இமாலய இலக்கு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் இரண்டாவது போட்டி திருவணந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனான மேத்யூ வேட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் அமைத்து கொடுத்தார். 25 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த போது ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும், பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்களும், கடைசி நேரத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 235  ரன்கள் குவித்துள்ளது.

பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போன்று ஸ்டோய்னிஸ் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.