பிரசீத் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் அசத்தல் பந்துவீச்சு… ஆஸ்திரேலியாவை ஈசியாக வீழ்த்தியது இந்திய அணி !!

பிரசீத் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் அசத்தல் பந்துவீச்சு… ஆஸ்திரேலியாவை ஈசியாக வீழ்த்தியது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி திருவணந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், ஜெய்ஸ்வால் 53 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 235 ரன்கள் குவித்தது.

இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 19 ரன்கள் எடுத்து கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஸ்டோய்னிஸ் 45 ரன்களும், டிம் டேவிட் 37 ரன்களும், கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் போராடிய மேத்யூ வேட் 42* ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதாலும், இலக்கு மிக பெரியது என்பதாலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரசீத் கிருஷ்ணா மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.