எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் மோசமாக செயல்பட்ட வீரர்கள் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் பார்வையாக உள்ளது.
அந்தவகையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று வாய்ப்பு கொடுத்தும் தன்னுடைய வாய்ப்பை வீணடித்த மூன்று வீரர்களை ஆஸ்திரேலிய அணிக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபக் ஹூடா.
தான் பங்கேற்ற போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவவில்லை என்ற மகத்தான சாதனை படைத்திருந்த இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா அந்த சாதனையை ஆசியக் கோப்பையில் இழந்துவிட்டார்.
சிறப்பாக செயல்படுவார் என்று இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் இவருடைய பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, மேலும் இவரை பந்துவீச்சுக்காகவும் பயன்படுத்தவில்லை என்பதால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இவர் புறக்கணிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.