தொடரை வெல்லப்போவது  யார்..? நாளை கடைசி ஒருநாள் போட்டி !!

தொடரை வெல்லப்போவது  யார்..? நாளை கடைசி ஒருநாள் போட்டி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

ராஞ்சி மற்றும் மொஹாலியில் நடந்த 3-வது, 4-வது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. குறிப்பாக, மொஹாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

அதனால், டெல்லியில் நாளை (மார்ச் 13) நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது.

கடைசி போட்டியைப் பொறுத்தவரை, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். இதில், நன்றாக விளையாடினால் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் உலகக் கோப்பை கனவு கலைந்துவிடும்.

அம்பதி ராயுடுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் திரும்ப சேர்க்கப்பட வாய்ப்பில்லை. விஜய் சங்கர், கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பார்கள்.

ரிஷப் பண்ட் வாய்ப்பை பயன்படுத்தினால் உலகக் கோப்பை அணியில் 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெறலாம்.

அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே, அதே உத்வேகத்துடன் நாளையை போட்டியிலும் களம் காண்பார்கள் என தெரிகிறது.

ஒருநாள் தொடரை வெல்ல இரு அணிகளும் நாளைய போட்டியில் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அதேவேளையில் இரு அணிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Mohamed:

This website uses cookies.