மேத்யூ வேட் கேப்டன்… இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான தரமான டீமை அறிவித்தது ஆஸ்திரேலியா !!

மேத்யூ வேட் கேப்டன்… இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான தரமான டீமை அறிவித்தது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நடைபெற இருக்கும் இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

நவம்பர் மாதம் 23ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி.20 தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரரான மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் டேவிட் வார்னர், டர்வீஸ் ஹெட், டிம் டேவிட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் பந்துவீச்சாளர்களாக ஆடம் ஜாம்பா, ஜான்சன், தன்வீர் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியுடனான டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி;

மேத்யூ வேட், ஜேசன் பெஹண்ட்ரூஃப், சியன் அபாட், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், டர்வீஸ் ஹெட், ஜாஸ் இங்லீஸ், ஸ்பென்சன் ஜான்சன், கிளன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி.20 தொடருக்கான அட்டவணை;

முதல் டி.20 போட்டி – நவம்பர் 20 – விசாகப்பட்டினம்

இரண்டாவது டி.20 போட்டி – நவம்பர் 26 திருவணந்தபுரம்

மூன்றாவது டி.20 போட்டி – நவம்பர் 28 – கவுஹாத்தி

நான்காவது டி.20 போட்டி – டிசம்பர் 1 – நாக்பூர்

ஐந்தாவது டி.20 போட்டி – டிசம்பர் 3 – ஹைதராபாத்

 

Mohamed:

This website uses cookies.