சும்மாவா ஐபிஎல் டீம்ஸ் இவருக்கு போட்டி போட்டாங்க.. இப்படிபட்ட ஒருத்தன் தலைமுறைக்கு ஒருமுறை தான் வருவான்! – எதிரணி வீரருன்னு பாக்காம, திறமையைக்கண்டு புகழ்ந்த அஸ்வின்!

காரணமாகத்தான் ஐபிஎல் அணிகள் கேமரூன் கிரீனுக்கு போட்டி போட்டன. தலைமுறையில் சிறந்த வீரராக இருப்பார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரவிச்சந்திரன்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் குறிப்பிடத்தக்கவிதமாக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் கவாஜா மற்றும் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இருவரும் ஜோடி சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 208 ரன்கள் சேர்த்து இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் திகழ்ந்தது.

அந்த தருணத்தில் உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், லாவகமாக வைட் திசையில் பந்துவீசி வலை விரித்தார். அதில் கேமரூன் கிரீன் வசமாக சிக்கி அவுட்டானார். இவர் டெஸ்டில் முதல் செஞ்சுரி அடித்து, 114 ரன்களுக்கு அவுட்டானார்.

கேமரூன் கிரீன் விக்கெட்டை எடுத்தபின் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை சொற்பரன்களில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 480 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா அணி.

இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேட்டியளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தொகையான 17.5 கோடி ரூபாய் கொடுத்து கேமரூன் கிரீன் எடுக்கப்பட்டதை குறிப்பிட்டும், முதல் இன்னிங்சில அவர் ஆடிய விதத்தைப் பற்றியும் பேசினார். ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது:

“ஐபிஎல் ஏலத்தில், கேமரூன் கிரீன் சென்ற தொகையிலிருந்தே தெரிகிறது எப்பேர்பட்ட வீரர் என்று. தலைமுறைக்கு ஒருவர் மட்டுமே இப்படிப்பட்டவராக இருப்பர்.” என்று பெருமிதமாக பேசினார்.

மேலும் மைதானத்தின் பிட்ச் பற்றி பேசிய அஸ்வின், “இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் மிகவும் ஸ்லோவாக இருந்தது. ஆகையால் ஆஸி., அணியால் விரைவாக ரன்குவிக்க முடியவில்லை. ஆனால் இனிவரும் நாட்களில் பிட்ச் ஸ்லோவாக இருக்காது என்று நம்புகிறேன். முதல் இரண்டு நாட்களில் இல்லாத அளவிற்கு வேகமாக ரன்களை அடிக்க முடியும் என்று நம்புகிறேன்.

மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை உற்சாகப்படுத்த அவளோடு இருக்கிறேன்.” என்றும் பேசினார்.

Mohamed:

This website uses cookies.