ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !!

ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 3ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 3
ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர்

ஆறு மாசத்திற்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் நீங்கள் நல்ல வீரராக கருதப்பட மாட்டீர்கள் என்று இஷான் கிஷனின் மோசமான ஆட்டம் குறித்து சபாக் கரீம் விமர்சித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் பாராட்டைப் பெற்ற இஷான் கிஷன், அதற்குப்பின் எந்த ஒரு போட்டியிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 1ஆறு மாசத்துல ஒரே போட்டில மட்டும் ஒழுங்கா விளையாண்டா போதுமா..? இஷான் கிஷனை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர் !! 1

குறிப்பாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இவர் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்த்து சொந்த மண்ணிலேயே மோசமாக விளையாடியதால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் இஷான் கிஷனை விமர்சித்து வருவதோடு அவருக்கு தேவையான அறிவுரைகளையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபாக் கரீம் இஷான் கிஷானின் மோசமான ஆட்டம் குறித்து தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சபாக் கரீம் பேசுகையில்,“இஷான் கிஷன் செய்யும் இந்த தவறு முதல் முறை கிடையாது இவர் 2021 டி20 உலக கோப்பை தொடருக்கு முன் அதிக கண்களை குவித்து அசத்தினர் ஆனால் அவரால் முக்கியமான தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை இதன் காரணமாகவே அவர் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். உங்களுக்கு இந்திய அணியில் இடம் வேண்டுமென்றால் நீங்கள் ரண்களை குவித்து கொண்டே இருக்க வேண்டும். அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் பந்தை எதிர்கொள்ளும் விதம் மற்றும் ஷார்ட் செலேச்சன் என அனைத்திலும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும், ஆறு மாதத்தில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டும் அதிரடியாக விளையாடிவிட்டு பின்பு ஏன் தன்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதை அவர் காரணத்துடன் தெரிந்து கொள்ள வேண்டும் நிச்சயம் உங்களுக்கு திறமை இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”என்று சபாக் கரீம் பேசியிருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இஷான் கிஷன் 24 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தால் என்பதால் இவருக்கு எதிர்வரும் டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:
whatsapp
line