நல்லா விளையாடி என்ன பிரயோஜனம்,அவருக்குத்தான் அங்கீகாரமே கிடைக்கலையே ; சீனியர் வீரர் குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் !!

நல்லா விளையாடி என்ன பிரயோஜனம்,அவருக்குத்தான் அங்கீகாரமே கிடைக்கலையே ; சீனியர் வீரர் குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்..

புஜாராவின் திறமைகளுக்கு இந்திய அணியில் போதுமான மதிப்பு கிடைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற வீரர்கள் எல்லாம் டி20 தொடரில் அதிக கவனம் செலுத்தி வரும் இந்த சமகால கிரிக்கெட்டில், டெஸ்ட் தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதில் தனக்கான ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்ட இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் புஜாரா ., இந்திய அணிக்காக 2010 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 168 டெஸ்ட் இன்னிங்ஸில் பங்கேற்று 7000க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ளார், அதில் 19சதங்களும் 34 அரை சதங்களும் அடங்கும்.

இந்திய அணியில் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அதிகம் டிபன்ஸிவ் ஷாட் விளையாடும் புஜாராவை எதிர்கொள்ள சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களும் அச்சம் கொள்வார்கள். அந்த அளவிற்கு இவர் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்து விடுவார்.

இவருடைய ஆட்டம் மந்தமாக உள்ளது என்று தற்போதுள்ள கிரிக்கெட் தெரியாத ரசிகர்கள் கூறினாலும் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை இவரிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்களே இளம் தலைமுறையினருக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

அப்படி டெஸ்ட் தொடரில் தலைசிறந்த வீரராக திகழும் புஜாரா தற்பொழுது தன்னுடைய 99 ஆவது டெஸ்ட் போட்டியை பங்கேற்றக் விளையாடி வருகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடினால் டெஸ்ட் தொடரில் 100 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வீரர்களின் பட்டியலில் இடம் பெற்று விடுவார்.

திறமைக்கேற்ற மதிப்பு இல்லை..

இந்த நிலையில் நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடவிறுக்கும் புஜாரா குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், “புஜாராவின் அச்சீவ்மென்ட் மற்றும் அவருடைய முக்கியத்துவத்தை இந்திய அணி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன் அவர் இந்திய அணிக்காக மிகச்சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். அவருடைய பங்களிப்பால் இந்திய அணி எவ்வளவு வெற்றிகளை பெற்றுள்ளது என்பது தெரியும், இந்திய அணியின் வெற்றியில் அவருடைய பங்களிப்பு என்பது இன்றியமையாதது” என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.