சச்சின் டெண்டுல்கர், டிவில்லியர்ஸின் சாதனை காலி… பெரிய சாதனை படைத்த டேவிட் வார்னர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அனியின் ஒரு துவக்க வீரரான மிட்செல் மார்ஸ் டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி 41 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1000 ரன்களை கடந்த டேவிட் வார்னர், இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கு முன் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்ரிக்கா அணியின் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையில் 20 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது, இதனை தற்போது 19 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த டேவிட் வார்னர் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் விண்டீஸ் அணியின் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்திய அணியின் சவுரவ் கங்குலி ஆகியோர் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.