கே. எஸ் பரத்த அணியில தூக்கிட்டு கே. எல் ராகுல டெஸ்ட் அணியில சேருங்க; வெளிப்படையாக பேசிய கவுதம் கம்பீர்..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இவரைப் போன்ற ஒரு ஸ்பெஷலான விக்கெட் கீப்பரை அணியில் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மோசமான பார்ம் காரணமாக துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்திய அணியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்ட கேஎல் ராகுல்., நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியில் கே எல் ராகுல் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.
இதன் காரணமாக இவரை ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் என இரண்டிலும் மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் லக்னோ அணியின் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் கே எல் ராகுல் போன்ற ஒரு ஸ்பெஷலான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் தேவை என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் தெரிவித்ததாவது, “இந்திய அணியில் எப்பொழுதும் ஒரு ஸ்பெஷலான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை, குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் நீங்கள் கேஸ் பரத் போன்று ஒரு பார்ட்டைம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை கொண்டு செல்ல முடியாது, நீங்கள் ஒருவேளை கே எல் ராகுலை உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் விளையாட வைக்கும் திட்டத்தை வைத்திருந்தால் அவரை ஒரு முழு நேர பேட்ஸ்மெனாக பயன்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கே எஸ் பரத் பேட்டிங் மற்றும் கீப்பிங் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. மேலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரண்களை குவிக்க தவறிவிட்டனர். இதனை எல்லாம் கருத்தில் வைத்துக் கொண்டால் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரத்தின் கரியர் கேள்விக்கு உள்ளாக்கப்படும். இதனால்தான் டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில் இந்திய அணியில் ஒரு ப்ராப்பர் விக்கெட் கீப்பர் தேவை, விக்கெட் கீப்பர் சில நேரம் கேட்ச்சை தவறவிட்டாலும் சில சமயங்களில் அபாரமான கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குவார்கள், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பரின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பது முன்னாள் வீரர்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கௌதம் கம்பீர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.