இந்திய அணியில் இருக்கும் பெரிய பிரச்சனை ரவீந்திர ஜடேஜா தான்… அவர் இத செய்யலேனா உலகக்கோப்பை நமக்கு கிடைக்காது; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு !!

இந்திய அணியில் இருக்கும் பெரிய பிரச்சனை ரவீந்திர ஜடேஜா தான்… அவர் இத செய்யலேனா உலகக்கோப்பை நமக்கு கிடைக்காது; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு

உலகக்கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படாவிட்டால் அது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய அணி இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், ஜடேஜா ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ஜடேஜா மிக சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் பீல்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரால் இந்திய அணிக்காக 10 ஓவர்கள் வீச முடியும், எப்படிப்பட்ட ஆடுகளத்திலும் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும், அதே போன்று பீல்டிங்கிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் ஜடேஜா ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும். பேட்டிங்கிலும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிக அவசியமானது. ஏனெனில் வெறும் 6 பேட்ஸ்மேன்களை நம்பி உலகக்கோப்பையில் விளையாட முடியாது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கிலும் இந்திய அணிக்காக வெற்றி பெற்று கொடுக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் 7வது இடத்தில் களமிறங்கும் ஜடேஜா கடைசி நேரத்தில் 10 ஓவர்களில் 80 முதல் 90 ரன்கள் எடுத்து கொடுக்க வேண்டிய நிலையை சந்திக்கலாம் அந்த நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்வது மிக அவசியம், எனவே பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும், இல்லையெனில் அது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.