நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்த சுப்மன் கில், அந்த உணர்வைப் பற்றி போட்டி முடித்த பிறகு பேசியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பீடு இருந்தது.
3ம் நாளில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்தாக வந்த புஜாராவும் முக்கியமான கட்டத்தில் 42 ரன்களில் வெளியேறினார்.
இவர்களுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடிவந்த சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணிக்கு மிகவும் தேவையான நேரத்தில் நிதானத்துடன் விளையாடி 194 பந்துகளில் இந்த சதத்தை அடித்தார்.
புஜாரா போனபின் உள்ளே வந்த விராட் கோலி, கில்லுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. பின் துரதிஷ்டவசமாக 128 ரன்களில் நேதன் லியோன் பந்தில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது வரை 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. விராட் கோலி 59 ரன்களிலும், ஜடேஜா 16 ரன்களிலும் களத்தில் நிற்கின்றனர்.
போட்டி முடிந்த பின், அகமதாபாத் மைதானத்தில் சதமடித்த உணர்வு பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார் சுப்மன் கில். அவர் பேசியதாவது: “அகமதாபாத் மைதானத்தில் சதம் அடித்தது சிறப்பான உணர்வாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இது எனக்கு ஹோம் கிரவுண்ட். ஆகையால் இங்கு ரன்கள் அடித்தது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருக்கிறது. அதேநேரம் எப்போது என்ன நடக்கும் என்று சற்று புரியாத வகையிலும் இருக்கிறது.” என்றார்.
அதன்பிறகு சதம் அடித்தபோது சந்தித்த கடினமான சூழல் மற்றும் அணுகுமுறை பற்றி பேசிய கில் கூறுகையில், “போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிங்கிள் அடிக்க வேண்டும் என்று முனைப்புடன் இருந்தேன். தொடர்ச்சியாக அதைச் செய்தது வந்தேன். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் பெரிதளவில் தாக்கம் இல்லை. நல்ல நிலையில் இருந்தபோது ஆட்டம் இழந்தது சற்று வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் இந்திய அணி கிட்டத்தட்ட 300 ரன்கள் எட்டியிருக்கும் நிலையில் மூன்று விக்கெடுகளை மட்டுமே இழந்திருக்கிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்போம் என்று எதிர்பார்க்கிறேன். அதேநேரம் ஐந்தாம் நாளில் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறேன்.” என்றார்.