யோவ் நீ எப்படியா இங்க..? Jarvo is back… சென்னையிலும் கெத்து காட்டிய ஜார்வோ
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நடைபெற்று நடைபெற்று சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்திற்குள் ரசிகர் ஜார்வோ திடீரென நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அனுமதியின்றி ஆடுகளத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம், பிரபலமும் ஆனவர் தான் லண்டனை சேர்ந்த ஜார்வோ.
ஜார்வோ 69 என பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் ஆடுகளத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய ஜார்வோவை, இங்கிலாந்தின் சில மைதானங்கள் அப்போது தங்களது மைதானத்திற்குள் நுழைய தடையும் விதித்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்காகவே இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள ஜார்வோ, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் போது ஆடுகளத்திற்குள் நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அனுமதியின்றி ஆடுகளத்திற்குள் நுழைந்த ஜார்வோ, விராட் கோலியிடம் சென்று பேசவும் செய்தார். ஆடுகள ஊழியர்களும், காவலர்களும் உடனடியாக வந்து ஜார்வோவை ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றினர். ஜார்வோ ஆடுகளத்திற்குள் திடீரென நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ராஹ், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், கேமிரான் க்ரீன், அலெக்ஸ் கேரி, கிளன் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹசில்வுட், ஆடம் ஜாம்பா.