பும்ராஹ் இல்லை… இவரது பந்துவீச்சை சமாளிக்கிறதே ரொம்ப கஷ்டம்; உண்மையை ஒப்புக்கொண்ட தினேஷ் கார்த்திக் !!

பும்ராஹ் இல்லை… இவரது பந்துவீச்சை சமாளிக்கிறதே ரொம்ப கஷ்டம்; உண்மையை ஒப்புக்கொண்ட தினேஷ் கார்த்திக்

முகமது சமி பந்துவீச்சை சமாளிக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் இந்திய அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது சமி இந்திய அணியின் மூன்று விதமான தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தற்போது டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வரும் முகமது சமி., 2021 ஆம் ஆண்டிற்கு முன்பு மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். பின்பு கடுமையான பயிற்சி மூலம் 2022 ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியின் ரெகுலர் வீரராக வலம்வரத் தொடங்கிய முகமது சமி தற்பொழுது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு  முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக திகழும் இந்தியா அணியின் நட்சத்திர இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை., அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக வெகுவாக பாராட்டியதுடன் அவர் குறித்த சுவாரசியமான சம்பவத்தையும் தெரியப்படுத்தியுள்ளார்.

அதில், முகமது சமி குறித்து ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் டார்ச்சர் சமி என்று சொல்லலாம்., ஏனென்றால் என்னுடைய ஒட்டு மொத்த கிரிக்கெட் கரியரிலும் வலை பயிற்சியில் அவரை எதிர்கொள்வது தான் மிகவும் கடுமையாக இருந்தது, அவர் என்னை பயிற்சி பொழுதும் போட்டியின் பொழுதும் விக்கெட்டை வீழ்த்திவிடுவார். வலைப் பயிற்சியும் பொழுது அவரை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமாகும்., எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறது என நினைத்து கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களிடத்தில் சென்று கேட்பேன் அவர்களும் வலை பயிற்சி பொழுது சமியின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு தினருவார்கள் மற்றும் வலை பயிற்சியில் முகமது சமியின் பந்துவீச்சை வெறுப்பார்கள்.

“இப்படி சமியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதற்கான முக்கிய காரணம் அவருடைய சீம் பொசிஷன், லென்த் மற்றும் அவருடைய அனுபவம் என்று கூறலாம்.மேலும்  சாதரணமாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் 1000 rpm பயன்படுத்தி பந்தை ரிலீஸ் செய்வார் ஆனால் முகமது சமி 1500-1600 rpm வேகத்தில் பந்தை வீசுவார்.இதுதான் மற்ற பந்துவீ்சாளர்களை விட சமி ஸ்பெஷலாக இருப்பதற்கு காரணம்” என்று தினேஷ் கார்த்திக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.