இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங்
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவர்களுக்கான ரேட்டிங் குறித்தும் இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான் – 5/10
இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக செயல்படவில்லை என்றாலும், மிக மோசமாகவும் செயல்படவில்லை.
ரோஹித் சர்மா – 8/10
இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து கொடுத்தார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
விராட் கோஹ்லி – 8/10
இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, வழக்கம் போல தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.
அம்பத்தி ராயூடு – 5/10
அம்பத்தி ராயூடு இந்த தொடரில் தனது பங்களிப்பை சரியாக செய்யவில்லை என்று தான் கூற வேண்டும், இதன் காரணமாகவே கடைசி போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
தினேஷ் கார்த்திக் – 7/10
மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிகச்சரியாகஏ செய்து கொடுத்தார்.
தோனி – 10/10
கடந்த ஒரு வருடமாக மிக மோசமான ஃபார்மால் சொதப்பி வந்த தோனி, கடந்த ஒரு வருடத்தில் தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்ச்சனங்களுக்கும் இந்த ஒரே தொடரின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இந்த தொடரின் மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்த தோனியே தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
ரவீந்திர ஜடேஜா – 7/10
ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் இந்த தொடரில் மிகச்சிறப்பாகவே செயல்பட்டார்.
குல்தீப் யாதவ் – 6/10
சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தார்.
முகமது ஷமி – 7/10
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள முகமது ஷமி ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தார்.
புவனேஷ்வர் குமார் – 9/10
ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்த புவனேஷ்வர் குமார் இந்த தொடரில் மிக அற்புதமாக செயல்பட்டார்.
கலீல் அஹமது – 5/10
இளம் வீரரான கலீல் அஹமது இந்த தொடரில் தனது பங்களிப்பை சரியாக செய்யவில்லை.
முகமது சிராஜ் – 2/10
ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட முகமது சிராஜ், தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தார். இதன் காரணமாகவே கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
கேதர் ஜாதவ் – 8/10
கடைசி போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்ட கேதர் ஜாதவ் பேட்டிங்கில் அரைசதம் அடித்து கைகொடுத்தது மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தார்.
விஜய் சங்கர் – 3/10
கடைசி போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்ட இளம் வீரர் விஜய் சங்கருக்கு விளையாடும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
யுஸ்வேந்திர சாஹல் – 8/10
கடைசி போட்டியில் மட்டும் களமிறக்கப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை அள்ளி மாஸ் காட்டினார்.