சந்தேகமே வேண்டாம்… அடுத்த போட்டியில் இவர் விளையாடுவது உறுதி; முக்கியமான தகவலை உறுதிப்படுத்திய ராகுல் டிராவிட் !!

சந்தேகமே வேண்டாம்… அடுத்த போட்டியில் இவர் விளையாடுவது உறுதி; முக்கியமான தகவலை உறுதிப்படுத்திய ராகுல் டிராவிட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சூசகமாக அறிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை மிக இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் `1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி 17ம் தேதி துவங்க உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்கவில்லை. சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடுவதில் வல்லவரான ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் குணமடைந்து அடுத்த போட்டிக்கான அணியில் இடம்பெற்றுவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுபெறும் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலரால் நம்பப்படும் நிலையில், அடுத்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடுவார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். ஸ்ரேயஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது. காயம் காரணமாக ஒரு சிறந்த வீரரை இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அது அணிக்கும் பயனளிக்காது. ஸ்ரேயஸ் ஐயர் பயிற்சியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதிக நேரம் பயிற்சி எடுத்தும் வருகிறார். தொடர்ந்து அவருக்கு அதிக பயிற்சிகள் வழங்க உள்ளோம். ஐந்து நாட்கள் விளையாடும் அளவிற்கு ஸ்ரேயஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும், இதில் எந்த சந்தேகமும் இல்லை. சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர், கடந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்துள்ளதால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுப்பதே சரியானதாக இருக்கும், அது இந்திய அணிக்கும் பயனளிக்கும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.