ஆஸ்திரேலியா கிட்ட தோத்தாலும் பராவாயில்ல… சுப்மன் கில்லுக்கு மட்டும் டீம்ல இடம் கொடுக்காதீங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !!

ஆஸ்திரேலியா கிட்ட தோத்தாலும் பராவாயில்ல… சுப்மன் கில்லுக்கு மட்டும் டீம்ல இடம் கொடுக்காதீங்க; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் சுப்மன் கில்லிற்கு இடம் கொடுக்க கூடாது என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்கியது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரெலிய அணியும் மோத உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் மிக முக்கிய வீரரான சுப்மன் கில், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுப்மன் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உறுதியானது தான் என்றாலும், சுப்மன் கில் முதல் போட்டியில் விளையாடுவாரா இல்லையா என்பதை இதுவரை இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் சுப்மன் கில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், சஞ்சய் பங்கரும் சுப்மன் கில் விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்தான தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், “சுப்மன் கில் காய்ச்சலில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றே தெரிறது. ஆனால் இதுவரை சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாட மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய அணி இதுவரை வெளியிடவில்லை, இதனால் சுப்மன் கில் காய்சலில் இருந்து பாதி குணமடைந்துவிட்டாலும் அவர் போட்டியில் பங்கேற்கவே விரும்புவார். அவர் இளம் வீரர் என்பதால் துடிப்புடன் இருப்பார், இதனால் எப்படியாவது ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாட வேண்டும் என்பதே சுப்மன் கில்லின் குறிக்கோளாக இருக்கும். இந்த தொடரின் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் சுப்மன் கில் இருப்பதால் ஒரு போட்டியை கூட தவறவிட விரும்ப மாட்டார்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சஞ்சய் பங்கர், “சுப்மன் கில் விசயத்தில் இந்திய அணியாக இருந்தாலும், சுப்மன் கில்லாக இருந்தாலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. சுப்மன் கில்லின் விசயத்தில் அவசரப்படுவது அவரது கிரிக்கெட் கேரியருக்கே ஆபத்தாக முடியும். இந்திய அணி சுப்மன் கில்லுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஒரு போட்டியில் அவர் விளையாடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, எனவே சுப்மன் கில் விசயத்தில் அவசரப்படாமல் முடிவு செய்ய முடியும். ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு எஞ்சியுள்ள மற்ற போட்டிகளில் அவரை பயன்படுத்தி  கொள்வது தான் சரியான முடிவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.