உலகக்கோப்பைய ஜெயிக்கிறதவிட இந்த டீம ஜெயிக்கிறது தான் ரொம்ப முக்கியம்; சுனில் கவாஸ்கர் அதிரடி பேச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிக முக்கியமானது என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (5-10-23) துவங்குகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. அதே போல் 11ம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியையும், 14ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.
வழக்கம் போல் இந்த உலகக்கோப்பை தொடரிலும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுதால், முன்னாள் இந்நாள் வீரர்கள் பலரும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற் பெறுவது இந்திய அணிக்கு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது உண்மை தான், ஆனால் பாகிஸ்தான் அணியுடனான போட்டி மிக முக்கியமானது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது அதிக எதிர்பார்ப்பும் நிலவும், கிரிக்கெட்டை பற்றி தெரிந்த சாதரண இந்திய ரசிகரிடம் கேட்டாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்றே சொல்லுவார், அந்த அளவிற்கு பாகிஸ்தான் அணியுடனான போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானது. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முழு தகுதியானது, திறமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.