இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ரேட்டிங் !!

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்; ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ரேட்டிங்

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற கோஹ்லி படை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கான ரேட்டிங் குறித்தும் இங்கு பார்ப்போம்.

மார்கரஸ் ஹரீஸ் – 5/10

ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மார்கரஸ் ஹரீஸ் ஒரு போட்டியில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடினார்.

ஆரோன் பின்ச் – 3/10

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் மிக முக்கியமானவரான ஆரோன் பின்ச் இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பதே உண்மையாகும்.

உஸ்மான் கவாஜா – 6/10

ஆஸ்திரேலியாவின் விராட் கோஹ்லி என்னும் அளவிற்கு ஓவராக சீன் கொடுப்பட்ட கவாஜா அப்படி ஒன்றும் பெரிதாக செயல்படவில்லை என்பதே உண்மையாகும்.

ஷான் மார்ஸ் – 4/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

மிட்செல் மார்ஸ் – 4/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

மார்னஸ் லபுன்சேன் – 4/10

கடைசி போட்டியில் மட்டுமே இடம்பெற்ற இவருக்கு போதிய வாய்ப்பே கிடைக்கவில்லை.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் – 6/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஓரிரு இன்னிங்ஸில் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டார்.

டர்வீஸ் ஹெட் – 5/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

டிம் பெய்ன் – 5/10

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெய்ன், ரிஷப் பண்ட் கிண்டலடித்தை போலவே பேசி கொண்டே இருந்ததை தவிர வேறு எதுவும் பெரிதாக செய்து விடவில்லை.

பேட் கம்மின்ஸ் – 8/10

ஆல் ரவுண்டரான பேட் கம்மின்ஸ் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்.

மிட்செல் ஸ்டார்க் – 4/10

அசுர வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்த தொடரில் சொதப்பியதன் மூலம் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

நாதன் லயோன் – 8/10

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான இவர், பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

ஜாஸ் ஹசீல்வுட் – 7/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

பீட்டர் சிடில்  5/10

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இவர் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இருந்த போதிலும் இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியும் வாய்ப்பு கொடுத்துள்ளது. பீட்டர் சிடில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.