இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங் !!

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங்

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற கோஹ்லி படை 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கான ரேட்டிங் குறித்தும் இங்கு பார்ப்போம்.

முரளி விஜய் – 2/10

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறக்கப்பட்ட முரளி விஜய் ஒரு இன்னிங்ஸில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

கே.எல் ராகுல் – 2/10

மூன்று போட்டிகளில் இடம்பெற்ற கே.எல் ராகுல் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே ஒரளவிற்கு விளையாடினார். இவரின் சொதப்பல் ஆட்டம் தொடரும் பட்சத்தில் இந்திய அணியில் இருந்தே இவர் ஓரங்கட்டப்பட வாய்ப்புகள் உள்ளது.

புஜாரா – 10/10

ஆஸ்திரேலிய அணியுடனான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்த இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் புஜாரா, இந்த தொடரில் மூன்று சதம் அடித்துள்ளார். இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை வெறும் ஏழு ரன்களில் தவறவிட்டார்.

விராட் கோஹ்லி – 8/10

இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தார்.

மாயன்க் அகர்வால் – 9/10

கடைசி இரண்டு போட்டிகளில் மற்றும் விளையாடிய மாயன்க் அகர்வால் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அற்புதமாக செயல்பட்டார்.

ஹனுமா விஹாரி – 7/10

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நாயகனாக ஹனுமா விஹாரி உருவெடுத்துள்ளார்  என்றால் அது மிகையாகாது.

ரஹானே – 5/10

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே ஓரளவிற்கு தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தார்.

ரோஹித் சர்மா – 7/10

இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரோஹித் சர்மா, ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டார்.

ரிஷப் பண்ட் – 8/10

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், ஒரு சதத்துடன் சேர்த்து இந்த தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார்.

ஜடேஜா – 6/10

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் கடைசி இரண்டு போட்டியில் களமிறக்கப்பட்ட ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார்.

அஸ்வின் – 7/10

முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் காயம் காரணமாக கடைசி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.

குல்தீப் யாதவ் – 8/10

கடைசி போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை அள்ளி பல்வேறு சாதனைகள் படைத்த குல்தீப் யாதவ் இந்த தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார்.

ஜஸ்ப்ரிட் பும்ராஹ் – 9/10

வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பும்ராஹ் இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டார்.

முகமது ஷமி – 7/10

வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.

உமேஷ் யாதவ் – 5/10

வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.

இஷாந்த் சர்மா – 6/10

வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.

Mohamed:

This website uses cookies.