இத மட்டும் செய்யாம இருந்திருந்தா ரோஹித் சர்மாவ ஒருத்தனும் மதிச்சிருக்க மாட்டாங்க; உண்மையை பேசிய முன்னாள் வீரர்
நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து நீண்ட நாட்கள் சந்தித்து வந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக கருதப்படும் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட துவங்கியதில் இருந்து பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவரால் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ரோஹித் சர்மா தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் விமர்சித்தவர்கள் எல்லாம் தற்பொழுது ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பாராட்டி வருகின்றனர்.குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை நாலு திசைகளிலும் அடித்து ஆடி, ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை வெறுப்படைய செய்தார்.
ரோஹித் சர்மாவின் பலமே இதுதான்..
இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் துவக்க வீரராக ரோஹித் சர்மா செயல்படுவது தான் அவருடைய பலமே என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயான் செப்பல் தெரிவித்ததாவது, “டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக ரோஹித் சர்மா செயல்படுத்து துவங்கியதுதான் அவருடைய கிரிக்கெட் கரியரை காப்பாற்றியது. அவர் தன்னுடைய அபாரமான திறமைகளை லோயர் ஆர்டரில் விளையாடி வீணடித்துக் கொண்டிருந்தார். தற்பொழுது அவர் துவக்கவீரராக செயல்படுவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பாப்புலாரிட்டியிடம் இருந்து ரோஹித் சர்மாவை காப்பாற்றியுள்ளது. தற்பொழுது ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் அவருடைய கேப்டன்ஷிப் ரோஹித் சர்மாவை துடிப்புடன் வைத்துள்ளது, அவர் அணியை வழிநடத்திய விதம் மற்றும் அவருடைய பேட்டிங் தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது” என்று ரோகித் சர்மாவின் செயல்பாடு குறித்து இயான் செப்பல் பாராட்டை தெரிவித்திருந்தார்.