குல்தீப் யாதவ் ஆடுன விதம் உண்மையில் பிரமாதமாக இருந்தது ; மனதார பாராட்டிய முன்னாள் வீரர் !!

குல்தீப் யாதவ் ஆடுன விதம் உண்மையில் பிரமாதமாக இருந்தது ; மனதார பாராட்டிய முன்னாள் வீரர்…

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியின் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் பத்து விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்திருந்தது, இதன்பிறகு பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது.

இந்திய அணி சார்பில் முகமத் சிராஜ் மூன்று விக்கெட்டும் குல்தீப் யாதவ் நான்கு விக்ககெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த குல்திப் யாதவ், மிகச் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் அணி வீரர்களை சீட்டு கட்டு போல் சரித்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள், குல்தீப் யாதவின் கம்பேக்கை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடிய விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “குல்தீப் யாதவின் சிறப்பான ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது, குல்தீப் யாதவ் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல்போனது வருத்தத்தை ஏற்படுத்தியது , குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வாய்ப்பு கிடைக்காமல் போனது ஆச்சரியத்தை அளித்தது”.

“ ஆனால் தற்பொழுது நடைபெற்ற போட்டியில் குல்தீப் யாதவ் செயல்பட்ட விதம்உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் இவர் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றுவார்,இந்த போட்டியில் குல்தீப் யாதவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது, மேலும் அவர் பந்தை கட்டுப்படுத்தி விதமும் நன்றாக இருந்தது என வாசிம் ஜாபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.