அந்த பையன தொந்தரவு பண்ணாம இருக்கது தான் நல்லது; ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர் !!

அந்த பையன தொந்தரவு பண்ணாம இருக்கது தான் நல்லது; ரிஷப் பண்டிற்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்

ரிஷப் பண்டை பொறுப்பாக விளையாட வேண்டும் என கட்டாயப்படுத்தாதீர்கள் என விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்

லிமிடெட் ஓவர் போட்டிகளில் மோசமான பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ரிஷப் பண்ட், நடைபெற்ற முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி விமர்சனத்தவர்களெல்லாம் வாயடைக்கும்படி செய்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 48 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து தவித்து வந்த பொழுது, புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட்,மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி சரிவிலிருந்து மீட்டெடுக்க உதவினார்.

அந்த போட்டியில் 45 பந்துகளை எதிர் கொண்ட ரிஷப் பண்ட் 46 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 6 போர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட், டெஸ்ட் தொடரில் இன்னும் பொறுமையாக விளையாடினால் நல்ல ரன்களை அடிக்கலாம் என்று அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஆனால் ரிஷப் பண்ட் எப்பொழுதும் போல் அதிரடியாகவே செயல்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் தெரிவித்து வருகினறனர். அந்த வகையில் விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவும் ரிஷப் பண்ட் எப்பொழுதும் போல் அதிரடியாகவே செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார் சர்மா தெரிவித்ததாவது,“ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டால் அவர் மேட்ச் வின்னர் என்று மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால்  அதிரடியாக ஆட வேண்டும் என நினைத்து விக்கெட்டை இழந்து விட்டால் அவர் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார் என்று விமர்சிக்கின்றனர். என்னை பொருத்தவரையில் அதிரடியாக செயல்படக்கூடிய ரிஷப் பண்ட்டை அவருடைய ஆட்டத்தை விளையாட விட வேண்டும். தேவையில்லாமல் அவரை பொறுப்புடன் செயல்படு என கட்டாயப்படுத்தக் கூடாது. அவர் ரிஸ்க்கான ஷாட்டை அடித்தாலும் அதை முன்கூட்டியே திட்டமிட்டு தான் அடிக்கிறார் ஏனென்றால் தற்போதைய அணியில் அவரும் சீனியர் வீரராக தான் உள்ளார்” என ராஜ்குமார் சர்மா தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.