எனக்கு இது மட்டும் தான் முக்கியம்… சதம் அடிக்கிறது முக்கியமே இல்ல; புஜாரா பெருந்தன்மை !!

எனக்கு இது மட்டும் தான் முக்கியம்… சதம் அடிக்கிறது முக்கியமே இல்ல; புஜாரா பெருந்தன்மை

சதம் அடிக்கவில்லை என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை என்று சத்தீஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் பிடித்த சத்தீஸ்வர் புஜாரா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 203 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சதத்தை அடித்திருந்த புஜாரா, பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் புஜாரா 90 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.

இதனால் புஜாரா மிகுந்த மன உளைச்சலில் இருப்பார் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உட்பட ரசிகர்களும் புஜாராவிற்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தான் சதம் அடிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை என்று புஜாரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், “நான் 90 ரன்கள் எடுத்திருந்தாலும் அது அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும், நான் விக்கெட்டை இழந்த அந்த பந்து மிகச்சிறந்த பந்தாகும், என்னால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை, இதனால் நான் சதம் அடிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. நான் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தேன், நிச்சயம் இதேபோன்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் நாங்கள் விளையாடிய மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் கிடையாது, ஆனால் அதில் சிறப்பாக செயல்பட்டது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது, சில நேரங்களில் நாங்கள் சதம் அடிக்க வேண்டும் என கடுமையாக முயற்சிப்போம். ஆனால் அணிக்கு போதுமான அல்லது அணியை வெற்றி பெறக்கூடிய ரன்கள் எடுத்தால் அதுவே போதுமானதாகும், நானும் ஷ்ரேயாஸ ஐயரும் ஜோடி சேர்ந்து அடித்த ரன்கள் இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமையும், மேலும் ரிஷப் பண்டும் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்” என புஜாரா தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.