கம்பேக்னா எப்படி இருக்கணும்னு இவர பாத்து கத்துகோங்க ; இந்திய வீரரை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர்..
கம்பேக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என புஜாராவை பார்த்து, இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
2022,தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒருவராக பார்க்கப்பட்ட புஜாரா, அதற்குப் பின் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார்.
இத்துடன் புஜாராவின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டது,இதனால் வெகுவிரைவில் புஜாராவே தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடினமான பயிற்சியின் மூலம் புஜாரா மீண்டும் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுக்க போராடினார்.
கை கொடுத்த கவுண்டி கிரிக்கெட்…
குறிப்பாக புஜாரா தன்னுடைய இழந்த பார்மை மீட்டு வருவதற்கு கவுண்டி கிரிக்கெட் மிகவும் உறுதுணையாக இருந்தது, இதில் சிறப்பாக செயல்பட்ட புஜாரா அடுத்தடுத்து சதங்களை பதிவு செய்து தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்தார்.
இதனால், புஜாராவிற்கு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, இதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட புஜாரா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த புஜாரா இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இவரை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்தும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், கம்பேக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என புஜாராவை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து முகமது கைஃப் பேசியதாவது, “அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு புஜாரா, செயல்பட்ட விதம் இளம் தலைமையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது, கம்பக் என்றால் எப்படி இருக்க வேண்டும் என இதன் மூலம் வீரர்கள் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். 6500+ ரன்கள் அடித்திருந்தும் புஜாரா டெஸ்ட் தொடரிலிருந்து புறக்கணிக்கப்பட்டார், இவருடைய பெயர் விராட் கோலிக்கு பிறகு நிச்சயம் வந்திருக்க வேண்டும், ஆனால் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இருந்த போதும் இவர் நம்பிக்கையை விட்டுவிடாமல் கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி சதங்களை பதிவு செய்தார், மேலும் 50 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்று தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து தன்னை அணியிலிருந்து நீக்கியதற்காக தேர்வாளர்களை மன்னிப்பு கேட்க வைத்தார். இவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்த்து தேர்வாளர்கள் இவரிடம் சரண்டராகி விட்டார்கள் ” என புஜாரவை முகமது கைஃப் வெகுவாக பாராட்டியிருந்தார்.
புஜாரா இதுவரை 164 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடி 6700+ ரன்கள் அடித்துள்ளார்.அதில் 18 சாதகங்களும், 33 அரை சதங்களும் அடங்கும்.