திட்டமா, அப்படின்னா…. உலகக் கோப்பை தொடர் குறித்து எங்களிடம் எந்த திட்டமும் கிடையாது ;ரோஹித் சர்மா அதிர்ச்சி தகவல்…
ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதற்கு இன்னும் பல மாதங்கள் உள்ளதால் அதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை என்ற ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கோப்பை தொடரை தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்தடுத்த இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. என்னதான் இந்திய அணி இருதரப்பு தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் தான் செய்த தவறை இன்று வரை சரி செய்து கொள்ளாமலே இருக்கிறது.
உதாரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக செயல்பட்ட வீரர்களின் 11 பேரை மாற்றி விட்டு தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை விளையாடி வருகிறது. இப்படி ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் அதிக அளவு இருக்கும் பட்சத்தில் எப்படி இந்திய அணி நிலையாக செயல்பட முடியும் என இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணியை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்வரும் 2023 உலகக் கோப்பை தொடர் சம்பந்தமாக எந்த ஒரு திட்டமும் தங்களிடம் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா தெரிவித்ததாவது, “ஒவ்வொரு முறையும் நாங்கள் விளையாடும்போது அது ஏதோ ஒன்றிற்கான தயாரிப்பாக தான் இருக்கும், 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன, இதனால் நாங்கள் அதைப் பற்றி எதுவுமே சிந்திக்கவில்லை, ஒரு அணியாக எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்” என தெரிவித்திருந்தார்.
மற்ற அணிகளெல்லாம் தங்களுடைய அணிகளில் பல்வேறு விதமான மாற்றத்தை ஏற்படுத்தி, அடுத்த உலக கோப்பை தொடரை வெற்றி பெற வேண்டும் என முயற்சி செய்து வரும் இந்த நிலையில், ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடர் குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை என தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.