அவர் வந்துட்டா உன்ன மதிக்கவே மாட்டாங்க தம்பி… கிடைச்ச வாய்ப்ப சரியா யூஸ் பன்னிக்க; இளம் வீரரை எச்சரித்த முன்னாள் வீரர்
ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிவிட்டால் உன்னுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என இளம் வீரருக்கு முகமது கைஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று. இந்த தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறாததால் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோகித் சர்மாவின் இடத்தில் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சுப்மன் கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்த நிலையில் தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 22 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதால் அவர் மீதான நெருக்கடி தற்பொழுது உண்டாகியுள்ளது.
இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் சுப்மன் கில்லுக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில்,இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ரோஹித் சர்மா அணிக்கு திரும்புவதற்குள் சுப்மன் கில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் சுப்மன் கில்லின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக விடும் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையை கொடுத்துள்ளார்.
சும்மன் கில் குறித்து முகமது கைஃப் தெரிவித்ததாவது, “பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் துவக்க வீரராக செயல்பட்ட கில் நன்றாக செட்டாகிவிட்டார், இருந்தபோதும் தன்னுடைய விக்கெட்டை இழந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இதேபோன்று சுப்மன் கில் சொதப்பினால் அவருக்கான இடம் பறிபோகிவிடும், குறிப்பாக இதேநிலையில் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிவிட்டால் இவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாக விடும்.
“சுப்மன் கில், கடைசியாக விளையாடிய 22 இன்னிங்ஸில் ஒரு சதம் கூட கிடையாது. இதில் அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்திருந்தாலும் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை. துவக்க வீரராக செயல்படும் பொழுது 20 அல்லது 30 ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டால் நிச்சயம் பெரிய ரன்களை எடுக்க வேண்டும். விராட் கோலி வந்தவுடன் பெவிலியன் திரும்பியதால், அவரால் லைன் மற்றும் லென்த் கணிக்க முடியவில்லை அதனால் விக்கெட்டை இழந்த என்பது போன்று ஆகிவிடும். ஆனால் சுப்மன் கில் செட் ஆகிவிட்டார். போதுமான அளவிற்கு பந்துகளை சந்தித்து விட்டார் ”என முகமது கைஃப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.