ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ரிஷப் பண்ட் மிரட்டலான சிக்ஸர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்காத இந்திய அணி, அவருக்கு பதிலாக ஷிகர் தவானிற்கு வாய்ப்பு கொடுத்தது.
ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கிய இந்திய அணியின் முடிவு மிக மோசமான என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ரசிகர்கள் பயந்ததை போன்றே போட்டியின் இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே கே.எல் ராகுல், ஜோஃப்ரா ஆர்ச்சரின் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வந்த விராட் கோலி 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் மிக மோசமான ஷாட் அடித்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவானும் மார்க் வுட் வேகத்தில் ஸ்டெம்பை இழந்து வெளியேறினார்.
தனது முதல் ஓவரை மிக துல்லியமாக வீசிய அதில் முக்கிய விக்கெட்டையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈசியாக வீழ்த்திவிட்டதால், அடுத்தடுத்து வரும் வீரர்களும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள் என்றே நெட்டிசன்கள் பேசி வந்த நிலையில், களத்திற்கு வந்த இந்திய நம்பிக்கை நாயகன் ரிஷப் பண்ட் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை கொஞ்சம் கூட பயமில்லாம எதிர்கொண்டு ஒரு மிரட்டலான சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்து மாஸ் காட்டினார்.
ரிஷப் பண்ட் அடித்த மிரட்டல் சிக்ஸர்;
டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவனாக திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட ரிஷப் பண்ட், தற்போது டி.20 போட்டிகளில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சையும் பயமில்லாமல் எதிர்கொண்டு விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.