குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து; இந்தியாவிற்கு 160 ரன்கள் இலக்கு !!

குல்தீப் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து; இந்தியாவிற்கு 160 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான  இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில்  கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு ஒருநாள் தொடர், பின்னர் டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன.

இதில் மாஸ்செஸ்டரில் நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஜேசன் ராய் 30 ரன்களும், ஜாஸ் பட்லர் 69 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் பந்துவீச்சாளரான டெவிட் வில்லேவை (29) தவிர மற்ற வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து இந்திய அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த போட்டி குறித்து ட்விட்டர் வாசிகளின் கருத்து;

 

Mohamed:

This website uses cookies.