இந்தியன் பிரீமியர் லீக் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களுக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள சிறந்த அடித்தளமாக இருந்து வருகிறது. இளம் வீரர்கள் தங்களது ஆட்டத்தின் மூலம் அவர்கள் பிசிசிஐ கிரிக்டெ் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர். இந்த முறை அப்படி சில வீரர்கள் தேசிய அணியில் தேர்வாளர்கள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர்.பி.சி.சி.ஐ இந்த முறை ஒரு புதிய டி20 அணியைக் கொண்டு வந்துள்ளது.
இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் ஒவ்வொரு முறையும் புதிய வீரர்களை அணியில் ஆட வைத்து அவர்களின் பலத்தை கோப்பையை வெல்லும் உக்தியாக பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. ஆனால் அணியில் சேர்க்கப்பட்டும் பல திறமையான வீரர்கள் பெஞ்சை தேய்க்க விட்டால் அது பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய கெட்ட பேரையே வாங்கி தரும்.அப்படி
இந்தியா Vs இங்கிலாந்து டி20 ஐ தொடரில் விளையாடும் லெவன் போட்டியில் வாய்ப்பு பெறப்போகாத அந்த 3 வீரர்கள் :
அக்சர் படேல்
அக்சர் படேல் சில காலமாக உள்நாட்டு அரங்கில் இருந்து விளையாடி வருகிறார். 2015 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மறுபக்கத்தில் பல்வேறு சீனியர் வீரர்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவி அக்சரால் தொடர்ந்து அணியில் இடம் பெற முடியவில்லை. ஆக்சர் 11 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரையில் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.அடுத்தடுத்து வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரவீந்திர ஜடேஜாவின் எழுச்சி காரணமாக பெஞ்சுகளை சூடேற்றுவதற்காக அணியில் அக்சர் சேர்க்கப்பட்டார்.
இந்த முறை பிசிசிஐ நிர்வாகம் ஆக்சர் படேலைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. அவரை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துள்ளது.ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஏற்கெனவே அணியில் உள்ள நிலையில் அக்சர் இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்ச் தேய்க்க போவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது !
ராகுல் தெவாட்டியா
ஷெல்டன் கோட்ரலின் ஒரே ஓவரில் 30 ரன்களை அடித்ததன் மூலம் அனைவரும் அறியப்படும் பெயராக ராகுல் தெவாட்டியா மாறினார். எனவே அவரை பிசிசிஐ தேசிய அணியில் சேர்த்து கொண்டது. ராகுலைப் பொறுத்தவரை இது ஒரு கனவு நனவான தருணம் போன்றது.
லெக்-ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ராகுல் தெவாட்டியா கடந்த சீசனில் சிறந்த ஃபார்மில் இருந்தார். கடந்த சீசனில் அவர் ரன் குவிப்பில் 42.50 சராசரியைக் கொண்டிருந்தார். ஒரு ஆல்ரவுண்டருக்கு தேவையான ஸ்ட்ரைக் விகிதமும் ( 139.34 ) கொண்டுள்ளார். எனவே இவை அனைத்தும் ராகுலுக்கு அணியில் இடம் பெற போதுமானதாக இருந்தது.
இருப்பினும், ராகுல் அணியில் இடம் பெறுவது சற்று கடினமாகவே தெரிகிறது. அணியில் ஏற்கனவே பல திறமையான ஆல் ரவுண்டர் வீரர்கள் இப்போது மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.எனவே தெவாட்டியாவும் பெஞ்ச் தேய்க்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
இஷான் கிஷன்
உள்நாட்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பின்னர் இஷான் கிஷன் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில், உள்நாட்டு போட்டியில் ஜார்க்கண்ட் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் ஒரு போட்டியில் அதிரடியாக ஆடி 173 ரன்கள் எடுத்தார்.
வரவிருக்கும் தொடரில் கிஷன் அறிமுகமாக வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள் அதுபோலவே கிஷானை பிசிசிஐ அணிக்கு உள் இழுத்து கொண்டுள்ளது.
ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்றால் , அது சாத்தியமில்லை. கிஷன் ஆட வேண்டுமானால் ரிஷாப் பந்த் அல்லது கே.எல்.ராகுல் ஆகியோர் பெஞ்சில் உட்கார வேண்டும்.அதே சமயம் விராட் கோலி இன்-ஃபார்ம் கிஷனுடன் செல்ல முடிவு செய்தால், அது அணிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.ஆனால் அவர் அப்படி செய்வாரா என்று சொல்ல முடியாது.கிஷான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் தற்சமயம் சீனியர் வீரர்கள் அணியில் இருக்க இவரும் பெஞ்ச் தேய்க்கவே அதிக வாய்பபு உள்ளது.