2nd t20 : ரோகித்தும் இல்லை, தவானும் இல்லை ! அப்ப யார் ஓப்பனிங் ? இந்திய அணி ட்விஸ்ட் !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. 

தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. கடந்த 12ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்ததே தோல்விக்கு காரணம் என்று பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி மாற்றங்களுடன் களமிறங்குமா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டி இன்று மாலை 7 மணியளவில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி முதல் டி20 போட்டியை  இழந்திருப்பதால் இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று கடுமையாக பயிற்சித்து இருகின்றனர். 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கின்றனர். அதன்படி முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்திய அணியில் கடந்த போட்டியில் ஓப்பனிங் செய்த தவான் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இடம்பெற்றிருக்கிறார். எனவே, இந்த போட்டியில் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் தான் ஓப்பனிங் செய்ய இருக்கிறார்கள். இதையடுத்து அக்சர் பட்டேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் பதிலாக டாம் கரன் இடம் பெற்றிருக்கிறார். 

இந்திய அணி : கே.எல்.ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் , ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்

இங்கிலாந்து அணி : ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஈயோன் மோர்கன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரன், ஆதில் ரஷீத்

  

Prabhu Soundar:

This website uses cookies.