இந்திய அணியில் பல அதிரடி மாற்றம்…முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி !!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்தின் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. யுஸ்வேந்திர சாஹல், பும்ராஹ் , ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்கள்து இடம் ரவி பிஸ்னோய், உம்ரன் மாலிக், ஆவேஸ் கான் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. சாம் கர்ரான் மற்றும் பாரிக்சன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சால்ட் மற்றும் ரீஸ் டாப்லே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்சல் பட்டேல், ஆவேஸ் கான், உம்ரன் மாலிக், ரவி பிஸ்னோய்.

இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்;

ஜேசன் ராய், ஜாஸ் பட்லர், டேவிட் மாலன், பிலிப் சால்ட், லியம் லிவிங்ஸ்டன், ஹாரி ப்ரூக், மொய்ன் அலி, டேவிட் வில்லே, கிரிஸ் ஜோர்டன், ரீஸ் டாப்லே, ரிச்சர்ட் கிளேசன்.

Mohamed:

This website uses cookies.