அவனுககிட்ட தேவை இல்லாம எதுவும் பேசாதீங்க; அட்வைஸ் கொடுக்கும் ரஹானே !!


இந்திய அணியின் துணை கேப்டனாக அஜிங்கியா ரஹானே இந்திய அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார், அதில் அவர் கூறியதாவது இந்திய அணி வீரர்கள் பற்றிய ரகசியத்தை வெளிநாட்டு வீரர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலரும் கலந்துகொண்டு விளையாடுவார்கள், 8 அணி பங்குபெறும் இந்த போட்டியை அனைத்து விதமான இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து வெவ்வேறு அணிக்காக விளையாடுவார்கள்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் முனைப்போடு இந்திய அணியின் நட்ச்சத்திர வீரர்களின் நிறை மற்றும் குறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள் இதன் மூலம் போட்டியை வெற்றி பெறுவதற்கான ஒரு திட்டத்தை தீட்டி வெற்றி பெற முயற்ச்சிப்பார்கள் இதன் அடிப்படையிலேயே அனைத்து அணிகளும் செயல்படும்.


இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியதாவது ஐபிஎல் போட்டியில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விளையாடுவது இயல்புதான், டிரஸ்ஸிங் ரூமில் தனது அணி வீரர்களுடன் மற்ற அணி வீரர்கள் பற்றி நிறை குறைகளை பகிர்ந்து கொள்வார்கள் இது வழக்கமான ஒன்றுதான்,

ஆனால் இந்திய வீரர்களாகிய நீங்கள்,இந்திய அணியின் முன்னணி வீரர்களின் ரகசியத்தை சொல்லாதீர்கள்!, இது வெளிநாட்டு வீரர்களுக்கு மிகப்பெரும் சாதகமக அமையும்.இதானால் இந்திய அணியின் திட்டமும் யுக்தியும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் மூலம் இந்திய அணிக்கு இது பின்னடைவாக அமையக்கூடும் என்று ரஹானே தெரிவித்தார்.

2021 பிப்ரவரி 5இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாட உள்ளது, ஆர்ச்சர் மற்றும் பென்ஸ்டாக் போன்ற தலைசிறந்த இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் இந்திய அணி வீரர்கள் பற்றி நீங்கள் ஏதேனும் ரகசியத்தை பகிர்ந்து விட்டால், அது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும் பின் அதற்கு ஏற்றார் போல் அவர்கள் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். இது இந்திய அணிக்கு மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Mohamed:

This website uses cookies.