இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் என்றால் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ள நிலையில், இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால், இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
மேலும் இந்த தொடரில் கேஎல் ராகுல் (காயம்) ரோஹித் சர்மா (கொரோனா தொற்று) போன்ற வீரர்கள் இடம் பெறவில்லை என்பதால் இந்திய அணியில் எந்த வீரர்களை ஆடும் லெவனில் விளையாட வைக்கலாம் என்ற குழப்பம் இந்திய அணி நிறைவேறுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் முக்கியமான வீரர்களில் இல்லாத நிலையில் இந்திய அணி எப்படி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் என்பது குறித்தும்… இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் எந்த வீரரை அணியில் இனைத்தால் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்பது குறித்தும்.. இந்திய அணியின் அடுத்த கேப்டன் யாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்தும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சமீப காலமாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்டை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஆடும் லெவனில் நிச்சயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சர்ச்சைக்கு பெயர் போன சஞ்சே மன்ஜரேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்ததாவது, “இந்திய அணியில் டாப் ஆர்டர் நன்றாக உள்ளது, பந்துவீச்சில் பும்ரா மற்றும் சமி ஆகிய இரு வீரர்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயம் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள், ஆனால் குறுகிய கால டெஸ்ட் தொடரில் பல அசத்தலான சாதனைகளை செய்த ரிஷப் பண்டை இந்திய அணியின் ஆடும் லெவனில் இணைக்க வேண்டும் , அவர் பலமுறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரிலும், வித்தியாசமான கண்டிஷன்களிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இருந்தால் நிச்சயம் வெற்றிதான். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இவருடைய சதம் இந்திய அணி வெற்றி பெற செய்தது, இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் என்றால் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் தான், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும்,டெஸ்ட் தொடரில் இவருடைய அணுகுமுறை வித்தியாசமாக உள்ளது இவர் ஆரம்பத்திலிருந்து அடித்து விளையாடாமல் பொறுமையாக காத்திருந்து 20 பந்துகள் டாட் பாலாக இருந்தாலும் அதற்குப் பின் 3 சிக்சர்கள் அடித்து நிலையை சரி செய்து விடுகிறார், இது பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலாக அமைந்து விடுகிறது. என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடர், ரிஷப் பண்டை சிறப்பாக செயல்படுவதற்கு உதவுகிறது, அவர் தமக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு நன்றாக யோசித்து சிறப்பாக செயல்படுகிறார், மேலும் டெஸ்ட் தொடரில் அவர் உற்சாகமாக செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது, லிமிடெட் ஓவர் போட்டிகளில் எப்படி செயல்படுகிறார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை ஆனால் டெஸ்ட் தொடரில் கடந்த மூன்று வருடங்களில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.