SENA(தென்னாபிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளுக்கு எதிராக 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் பும்ரா பும்ரா ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
கொரோனா தொற்றால் கைவிடப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை நீண்ட இடைவெளிக்குப்பின் இந்திய அணி இங்கிலாந்து மைதானத்தில் விளையாடி வருகிறது.
ரோகித் சர்மா அணியில் இடம் பெறாததால் பும்ரா தலைமையிலான இந்திய அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறது.
ஒரு கேப்டனாக எப்படி அணியை சிறப்பாக வழி நடத்துகிறாரோ அதேபோன்று ஒரு பந்துவீச்சாளராக பும்ரா தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.
போட்டியின் ஆரம்பம் முதலே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பும்ரா,இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தி SENA(தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா) நாடுகளுக்கு எதிராக 100 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற வரிசையில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
பும்ரா இங்கிலாந்து எதிராக 9 போட்டிகளில் 37 விக்கெட்டும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 7 போட்டிகளில் 32 விக்கெட்டும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 6 போட்டிகளில் 26 விக்கெட்டும் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்டும் வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார்.
முதல் ஐந்து இடத்தில் அணில் கும்ப்ளே(141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119),முகமது சமி (119), கபில் தேவ் (117) போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் பும்ரா தன்னுடைய முதல் 30 டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை கபில் தேவின்(30 போட்டிகளில் 124 விக்கெட்) சாதனையை முறியடித்து முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.