இனியாச்சும் திருந்துங்கடா… ஸ்ரேயஸ் ஐயரை தூக்கிட்டு இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க; மீண்டும் சொதப்பிய ஸ்ரேயஸ்; கடுப்பான ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயஸ் ஐயர் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 28வது போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன.
லக்னோ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகளை எதிர்கொண்டு அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் தேவையற்ற ஷாட் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர், தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாமல் வழக்கம் போல் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்தநிலையில், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ஸ்ரேயஸ் ஐயர், கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் சொற்ப ரன்களிலும், அதுவும் மீண்டும் ஷார்ட் பாலில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இந்திய அணியில் ஒரே பலவீனம் ஸ்ரேயஸ் ஐயர் தான் என கருதும் ரசிகர்கள், ஸ்ரேயஸ் ஐயருக்கு இனி வரும் போட்டிகளில் வாய்ப்பே கொடுக்க கூடாது, அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதில் சில;