இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு அரைசதம் அடித்த டெக்டர்… 12 ஓவரில் 108 ரன்கள் குவித்தது அயர்லாந்து அணி !!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி டப்லினில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் போடப்பட்ட பின்பு மழை நீண்ட நேரம் பெய்ததால், போட்டியின் ஓவர் இரு அணிகளுக்கும் தலா 12ஆக குறைக்கப்பட்டது. மழை காரணமாக இந்திய நேரப்படி 9 மணிக்கு துவங்க வேண்டிய போட்டியானது 11.25ற்கே துவங்கியது.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் (4) மற்றும் பால்பிர்னே (0) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டிலேனியும் 8 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன்பின் களத்திற்கு வந்த டெக்டர் இறுதி வரை ஆட்டமிழக்காமல், இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு 33 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமூம, டெக்டருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறுமுனையில் பொறுமையாக விளையாடிய அயர்லாந்து அணியின் விக்கெட் கீப்பரான டக்கர் 18 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள அயர்லாந்து அணி 108 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி சார்பில் சாஹல், ஆவேஸ் கான், ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Mohamed:

This website uses cookies.