இந்த இரண்டு ஜாம்பவான்கள் இருக்கும் பொழுது என்னை ‘GOAT’ என்று சொல்வது முறையாகாது ; பெருந்தன்மையுடன் பேசிய விராட் கோலி….
‘GOAT’ என்ற சொல்லுக்கு சச்சின் டெண்டுல்கர் மட்டும் வீவ் ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே தகுதியான வீரர்கள் என்று நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக வலம் வரும் விராட் கோலி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் பல்வேறு விதமான விமர்சனங்களை சந்தித்தார்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தன்னுடைய கேப்டன் பதவியெல்லாம் ராஜினாமா செய்து பேட்டிங்கில் கவனம் செலுத்திய விராட் கோலியால் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. சதம் அடிக்காமல் ஆயிரம் நாளை கடந்து விட்டதால் விராட் கோலி மீதான அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் போன்ற உள்ளூர் தொடரிலிருந்து ஓரம் கட்டப்பட்ட விராட் கோலி ஆசிய கோப்பையில் இடம் பெறுவாரா மாட்டாரா என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் துவங்கியது.
இந்த நிலையில் ஆசிய கோப்பையில் இடம்பெற்ற விராட் கோலி தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து, மீண்டும் இந்திய அணிக்கு அதிரடியான ரண்களை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து அசத்தி வரும் விராட் கோலியை (GOAT- Greatest of all time) அனைத்து காலத்திற்கும் சிறந்த வீரர், என்று முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஆனால் ‘GOAT’ என்று சொல்லுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீவ் ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே தகுதியான வீரர்கள் என்று விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி தெரிவித்ததாவது, “என்னை நான் எப்பொழுதும் ‘GOAT’ என கருதி கொள்வது கிடையாது, என்னை பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீவ் ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே அந்த சொல்லுக்கு தகுதியானவர்கள்” என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
விராட் கோலி என்னதான் பெருந்தன்மையுடன் தன்னை ‘GOAT’ என்று சொல்லிக் கொள்ளவில்லையென்றாலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விராட் கோலி எப்பொழுதுமே ‘GOAT’ ஆகவே கருதப்படுகிறார்.